Sunday, 9 September 2012


சமன் படுத்த 
பட வேண்டியே 
பல 
சந்தர்ப்பங்கள்...
இங்கு 
சம்பிரதாயங்களாக.
ஆம்
சடங்குகள் என்பது
நிகழ்ந்துவிட்ட 
நிகழ்வுகளின்
அனுபவங்களைக் கொண்டு
நிகழவிருக்கும் நிகழ்வுகளை
எதிர் நோக்கும்
சத்திய பிரமாணமே...
இந்த 
சடங்கு சம்பிரதாயங்கள்.
ஆனால்
கடந்து விட்ட 
அனுபவச்சுழல்களாக...
பொதி சுமக்கும் கழுதைகளாக...
செக்கு மாட்டின் மரபினனாகிய...
இன்றைய சூழலில்
அபரிமிதங்களின்
செழிப்பையும் உணராமல்
படைப்பாற்றலின்
மகத்துவமும் மறந்து
வெற்றுக் குப்பைகளை பதியம் இட்டு
வேற்றுமை 
உரங்களில் 
பெருமை பயிர்
வளர்க்கும்
பேரியக்க பேராற்றலின்
பெருந்திரளான துகள்களே...
பெருமையின் 
சிறப்புகளைக் கொண்டு
உணர்வுகளின் உண்மைகளை
ஆராதிப்போம்.
அறிவு 
என்பது கடந்த கால
நிகழ்வுகளின் நினைவு பட்டியல்.
அதாவது.
தகவல் பரிமாற்றத்திற்கான
சைகைகள், 
விழி அசைவில் இருந்து
அங்க அசைவுகளாக மாறி 
பின் 
சப்தங்களில் 
அதாவது அலறல்களில் 
உணரப்பட்ட 
அவ்வோசைகளை 
ஒழுங்கான வடிவத்திற்குள் 
கொண்டு வந்து  
மொழியென்றும் பின்னாளில் 
இசையென்றும்...
இதுபோன்ற  
தேடலின் விளைச்சல்களுக்காக,,, 
நடந்து முடிந்துவிட்ட நிகழ்வுகளின்
நகலை சேமிக்கும்...
பேரியக்கத்தின் அற்புத கொடை,
இந்த அறிவு. 
அறிவென்பது 
நிகழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை 
வினைகளுக்குமான விளைச்சல்களை 
அதாவது 
செயல்விடை காணும் செயலே...
நம் அறிவு.
ஆம்.
அதுவே... 
தேடல்.
தேடலின் சரிவு நிலையே 
ஆராய்ச்சி.
அதாவது 
விருப்பங்களை விரும்பி  
அவ்விருப்பதிற்கான 
பயணமே...
நம் வாழ்வு.
அதன் நுட்பமே தேடல்.
ஆனால் 
ஆராய்ச்சி என்பது
நடந்து முடிந்துவிட்ட நிகழ்வுகளின்
நகலை
சேமித்து வைத்திருக்கும் அறிவை
நம்பி...
நின்ற இடத்திலேயே... 
நிற்கும் இடத்தையே...
நோண்டி நோண்டி பார்க்கும் 
ஊர்வன ஜாதியின் செயலே...
இந்த ஆராய்ச்சி. 
அதாவது 
உணர்வுகளின் அடிப்படையில் 
நம்மனதில் எழுந்த 
விருப்பங்களை நம்பாமல்... 
தேடல் 
என்ற மறுமைகளின் மீது 
மகத்துவம் காணாமல்,
சூழ்ந்தழுத்தும் தன் இருக்க பேராற்றல்
என்ற "ஏகாத்துவ" நெறி மறந்து..,
அறிவென்றும்,
அறிவியல் என்றும்,
ஆராய்ச்சி என்றும்
அதனால் 
விளைந்த கண்டு பிடிப்புச்சாதங்களை 
நாம் 
நிகழ்த்திய பெருமை என்றும்.., 
வான வேடிக்கைகளில் 
பேதலிக்கும் நிலை துறப்போம்.
உணர்வுகளை போற்றுவோம்.
உதாரணத்திற்கு 
ஒன்று உரைப்போமேயானால்...
நீதி என்றும் 
தர்மம் என்றும்
இறைவனை 
அதாவது 
பேராற்றலின்
அருகாமையை உணரத்தவறிய நிலையில்,
கடந்துவிட்ட நிகழ்வுகளையும்
நம் எண்ண அலைகளில் 
நமக்கான
தேடலின் நோக்கத்தையும் 
பிரித்து பார்க்க
தெரியாத 
அதாவது 
பகுத்தறியாத நிலையில்...
நிழல்களின் உணர்ச்சியலையில்  
உந்தப்பட்டு உருவானவையே
புராணங்கள்.
நிகழ்வுகளின் நகலை
நாகரீகக் கோமாளி உருவம் பூண்டு,
பூனை ஜாதிக்கு
அதாவது கால்நடைகளுக்கு
ஆராய்ச்சி மணி கட்டும்
இந்த அறிவியலும்
ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளும்...
அதாவது
ஊர்வன என்ற நிலைக்கு
உயரும் முன் கூட,
அதன் அடுத்த நிலையான
பறப்பன நிலைக்கே உயர்வு கொண்டு 
தேட துணிந்த
விட்டில் பூச்சிகளின் நிலையே
அறிவிய கண்டுபிடிப்புகள்.
ஆக
ஒவ்வொருநாளும் புதியது
என்பதுவான பாதையில்...
ஒவ்வொருவருக்கும் தனித்தனி உலகம்,
தனித்தனி திறமைகள்.
தனித்தனி பெருமைகள். 
அதாவது
நோக்கங்கள் என
ஐந்தறிவும்,
நம்முள்ளே பஞ்ச பூதங்களாக...
என்ற
பகுத்தறியும் பேராற்றலே
ஆறாம் அறிவென்னும் கொள்கை.
ஊர்வன, 
பறப்பன,
நடப்பன,
நிலைப்பன
என 
எல்லாமும் 
நாமே
நம்மை காணும் காட்சிகள். அனைத்துமே
நம் விருப்பங்களே.
நம் வினைகளே.
ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை
உண்டென்ற தத்துவமே...
நம் விருப்பத்தினால் விளைந்த,
இந்த உலகமெனும்
அற்புத திரையில் 
உருவங்களாக.
அதாவது கதாபாத்திரங்களாக.
காணப்படுபவர்களும்
காண்பவர்களும்
நாமே.
இதில் முக்கியம்,
அதாவது முதன்மை.
ஆம் 
முழுமைக்கான முழு முகாந்திடத்துடன்
தெளிவோமேயானால்...
மேடையில் நடிகர்கள் நடிப்பது
ஒரு வாதம்.
மேடையே நடிக்கிறது!
இது
என் வாதம்.
ஆக, 
மேடையை மேன்மைப்படுத்தி
இயக்குவது 
நம் விருப்பங்கள்.
இவ்வதிசயத்தக்க இந்த படைப்பாற்றலின் 
மகாசக்தியை,
நாம் என்றுணர்வதே...
உணரும் தற்கவனமே... 
நன்மை k எல்லாம்.
அதாவது 
காணும் அனைத்தையும் 
நாம் என்றறிவது.
நமதுள்ளம் 
தூயதாக இருக்கும்
திசையில்...
குளிர் தென்றலாகவும்
வருடலாம்,
சாரலாகவும்
சிலிர்க்க செய்யலாம்... 
எல்லாம்
நம் மனமே.
மனதை நம்பும் 
நம் குணமே.
குணத்தை போற்றும் 
நம் முயற்சியே. 
முயற்சி என்பது
இயக்கத்தை உணர்வது.
உணர்வதென்பது
இயக்கத்தை இயக்குவது.
இயக்குதல் என்பது
தன் நிலையையே,
தான் மட்டுமே,
நானே இங்கு எல்லோரும்
நன்மைk  
இங்கு எல்லாமும்... 
என இயங்குவது.
இயக்கமும் இயங்குதலும் ஒன்றே.
என்பதுவே பகுத்தறிவு.
பகுத்தறிவின் மாண்பே 
நம்,இந்த மனித உரு. 
உதாரணத்திற்கு 
இன்னொன்று எடுத்தியம்புவோமேயானால்... 
ஒரு உலகம்.
அதில் ஒரு உலோகம். 
அதாவது இரும்பு.
நம் இருப்பு சுதந்திரம்,
நான் என்ற நிலையில்...
நாம் இருந்து கொண்டே இருக்கிறோம்
என்று 
மறந்த நிலையில்
மீண்டும் அதே உலகம்
அதில் 
ஓர் உலோகம்.
அதாவது இரும்பு.
அதனைக்கொண்டு  
ஒரு குடுவை செய்கிறோம்...
இப்பொழுது 
அதன் பெயர் குடுவை.
முன்னம் அதன் பெயர் இரும்பு.
இவ்வளவே 
இவ்வுலகத்திற்கும் 
உலோகத்திற்கும் 
உள்ள இருப்பு நிலை. 
அப்படியே நமக்கும். 
நாம்
காண்பவற்றிற்கும். 
மன்னிக்கவும்
நமக்கும்,நாம்
படைத்தவற்றிற்குமான தொடர்பு.
இந்த 
தொப்புள் கொடியின்
பாரம்பரியம் புரியாமல்,
அதாவது
பரம்பொருளின் பாரம்பரியம்
உணராமல்...
ஒரு கல்லெடுத்து 
கல்லை சிங்கமென்று
திருத்திய பின்னொரு நாளில் 
அச்சிலைக்காக... 
சிங்கத்திற்காக...
பயந்து நடுங்கும்
ஒரு நாணமில்லா பிழைச்செயலே...
நம் 
இந்த 
இன்றைய
உலக வாழ்க்கை.
பேதம் களைவோம். 
நன்மை K எல்லாம்.
  நன்மை A எல்லாமும்.  
நன்மையே M பிரான்.
       நன்மை பரிமாணம்.
     நன்மையே  L லாமும்.
        நன்மையே R வது அறிவும்.
          நன்மையும்  A கத்துவமே.
       ஆக,நன்மையில் J யித்துக் கொண்டேயிருப்போம்.

                                                                   எண்ணம்k.

Saturday, 8 September 2012



காதல்
பல 
இலட்ச 
வார்த்தைகளில் ஒன்று.  
காதல் 
எனும் 
ஓசை நயத்தின் விரிவு? 
அவ்வளவுதானா? 
காதல் என்பது 
சுகத்தின் தேடல்.
சுயத்தின் முகவரி.
பரிணாமத்தின் நேர் எதிர் பொருள். மனதிற்கான நேர்மை.
மனிதர்களின் ஆறுதல். 
ஆம் 
காதல் என்பது கண்ணியம்.
பூத்தலை புனிதமாக்கும்
பூவின் கண்ணியம்,
அழைப்பிதழை வனப்பாக்கி 
வனத்தையே வசந்தமாக்க...
இந்த பூத்தல் 
வண்டுகளுக்கான நேசம்.
மலரினுள் மகத்துவம் அல்லது 
மலருக்குள் மகரந்தம் என்று 
கலவை பாரம்பரியத்திற்க்கான வித்து.
இந்த கண்ணியம்.
மன்னிக்கவும்,
இந்த காதல்.
இந்த கண்ணியத்திற்குள் 
சம புண்ணியம் தேடுவோம். 
காதலை போற்றுவோம்.
காதல் என்பது
புனிதம்.
ஆம். 
சில புனிதங்கள்
புதைக்கப்படாமல் இருப்பதற்கும்,
சில 
அற்புதங்கள் அழிக்கப்படாமல்
இருந்ததற்கும் 
ஒரு உணர்வு பாலம்,
இந்த காதல்.
எனக்கு 
தெரிந்த
சில சொர்க்கங்கள் காதலால் சூழப்பட்டிருப்பதை கண்டு வியந்திருக்கிறேன்!
இந்த வியப்பு... மாயத்திற்க்கா
ஒருநூல் வித்தியாசமேயானாலும், அவ்வித்தியாசம் என்னும்  பேதமையை 
பிழையில்லாமல் நகர்த்தும் நிகழ்கால தவம்.
இந்தகாதல்.
பொறுமைக்கும்,
சகிப்பிற்க்கும் 
பாடம் கற்றுத்தரும் புத்தன்,இந்த காதல்.
இது, 
பூக்கும் ஓசையையும்,
திசையையும்,
எளிதில் கனிந்து விட முடியாது.
ஆம் 
காதல் ஒரு 
கால பைரவம்.
சுருங்கச்சொல்லின் வைபவ பெருவிழா. இதற்குள் 
வரம்புகள் விதிப்பதும்,
வயதுகள் நிர்ணயிப்பதும் 
காலப்பிழை.
ஆம் 
காதலை காலமாகக் கொள்வோம்.
காலம் சிறக்க இதுவே நெறி.
ஆம் 
பிழை மறைத்து காட்டும் மகத்துவம் வேறெதிலும் எத்தனிக்க வில்லையே! 
காமம் என்ற புவிபடைத்து 
அதில் கற்பென்ற நெருப்பை 
விதைத்தாலும், 
குளிர்ச்சியையே 
விளைச்சலாகத் தரும். 
தருவிக்கும். 
இந்த காதல் ஒரு வித முக்தியே.
பெருமைகளை விட்டொழித்து
மருமைகளில் வியாபித்து கொள்ள
காதல் கற்பிப்பது நல்லொழுக்கமே.
ஆம் 
காதலுக்குள்ளே அனைத்தும்.
பரிவு பாசமென்ற 
புவியியலும்,
அன்பு நேசமென்ற  
பேரியக்க பேராற்றலும்,
கனிவு தேடலென்ற வேதியியல் மாற்றமும்,
நோன்பு - நுட்பம் 
என்ற ஐக்கியம் 
ஆக
காதலுக்குள்ளே அனைத்தும்.
அணைப்பதற்க்குண்டான 
ஆரம்பம்
காமமாகவே உந்துவதானாலும்
காதலென்பது வினையே.
எதிர்வினையையே 
இயக்கமாக கொண்ட
செயல்பாட்டு வினை 
இந்த காதலில் 
கற்றரியலாம்.
கற்பதும் 
கற்பிப்பதும்
காதலிலே முழுமை பெறுகிறது.
உண்மையில் 
முழுமை ஏற்படாத 
முழுமைகளில் 
திளைப்பது
இந்த காதல் திசையிலே.
இதுவே 
இவ்வுலகத்திற்கான விசை.
சரணாகதிக்கான 
தூய அர்த்தம்
இந்த காதல்.
இதுதான் 
உண்மையில் மழலை பருவம்.
பெறுவதும்
பெற்றதும் 
எதற்கென தெரியாமல்
அனுபவிக்க துடிக்கும்
அதிகார வர்க்கம்.
இந்த
காதல் புரிபவர்கள்.
காதலின் 
நோக்கம் என்பது இன்பம்.
அதாவது  
நிறைவு.
நிறைவென்பதில் 
நீந்தி நீந்தி
நிறைவை நீட்டிக்கும்
இறையாண்மை,
இந்த காதல்.
படித்தறியாத பாமரனின்
பக்குவமே 
இந்த காதல்.
பாதுகாத்தல் 
என்ற நோக்கம்
பதுக்குதலில் ஆரம்பித்தது.
பதுக்குதலின் பாரம்பரியம்
பற்றாக்குறையால் அறியப்பட்டது.
பற்றாக்குறை என்பது
அபரிமிதங்களால் 
ஆன 
அற்புதங்களை  
அளவிடமுடியாதது.
அப்படியானால் 
காதல்
என்ற கனிம வேதங்கள்
முறையாக முற்றுபெறவில்லை,
என்பது
அதன் பொருள்.
முழுமை பெறாத எவ்வுலகத்திற்க்கும்
நிறைவு சாத்தியமில்லை.
முழுமையை சக்தியாக கொண்டவர்களுக்கு
நிறைவு ஒரு சத்தியம்.
அதாவது
சிவம்.
அப்படியானால்... 
விளைவும் விளைச்சலும்
பிரிந்த நிலையே 
அதாவது
காதல் இல்லா நிலையே 
பற்றாக்குறை.
ஆக 
காதல் என்பது
அபரிமிதம்.
அற்புதம்.
அதிசயம்.
ஆதி.
மகிழ்ச்சி.
நிறைவு.
பேராற்றல்.
ஆதலால்
காதல் செய்வீர்.
காதல் என்பது
படைப்பாற்றல்.
நோக்கமில்லாத
நோன்பு.
விரக்தி இல்லாத விவேகம்.
வற்றாத ஜீவ நதி.
பெருங்கடல்.
சங்கமம்.
ஆக 
காதலே நம் சங்கற்ப்பம்.
ஆம் 
காதல் புரிவது தவம்.
காதலே புரிதல்.
காரணமில்லாமல் 
களவாடல்
என்பது நிகழாது. 
ஒவ்வொரு நிகழ்வுகளும் 
ஒரு காரணத்திற்காக.
அதாவது 
நம் விருப்பத்திற்காக. 
முன்னம் விரும்பிய
நம் இன்பங்களை 
நம் பேரியக்கம் 
நமக்காக 
நிகழ்த்துக்காட்டும் 
ஒரு வானவேடிக்கையே
இன்றைய 
நம் நிகழ்வுகள். 
அல்லது 
நாம்
அறியப்படும் காரணங்கள்.
ஆக 
காரணங்களாக 
அறியப்படும் வரை 
அது 
வெறும் காரியங்களாக
அதாவது 
கலவாடல்களாக...
ஆம் 
நாம் விரும்பிய விருப்பத்திற்கான 
நோக்கம்
மறந்த நிலையில்,
காணும் காட்சியின்
பேதம் களையவே 
இந்த காதல் 
என்ற
உணர்வு.
அதாவது 
மறதியை மழுங்கடிக்கும் 
ஒரு மகத்துவ நிலை.
ஆதலால்...
காதல் வசப்படுவீர்.
எல்லாம் வசமாகும்.
நன்மை k எல்லாம்.
காதலும் கடவுளும் 
உணர உணரவே உணர்வாகும்
உன்னதம்.
வரம்பிற்க்குள்ளும்,
உறவுக்குள்ளும்,
காலச்சக்கரம் எனும் 
கலாச்சாரத்திற்க்குள்ளும் 
ஊடு பயிராக 
சிதையும் 
சிக்கலாக
காதலை 
சீர் கெடுத்தது போதும்.
கற்பென்பதே 
முதலில் தோன்றிய
மன நெருக்கடி.
பின்னாளில் எல்லா
சவுக்கடிகளுக்குமான
காட்சி பிழை.
ஆக 
காதல் கற்போம்
காதல் கற்பிப்போம்.
நன்மைkஎல்லாம்.  
         -எண்ணம்k.