Thursday, 16 February 2012

எண்ணை ஊற்ற விளக்கெரிந்தது.
என்னை ஊற்ற விளக்கனைந்த்தது.


அணைத்ததால் 
அணைந்தது 


அணைத்ததால் எரிந்தது.


அனைத்தபின்,
அனைந்தபின்- அனைந்தது..




அனைக்கும்முன்.
அரவனைக்கும்...
மாண்பு 
அரண்மனைக்கும் 
அரவான்- மனைக்கும் 
அரிவாள் மனைக்கும்.


பால் 
பேதமற்றது.முன்னது.
பின்னது
உயிர் பேதமற்றது.





















அனைத்தும்,
                                                     ஆனபின், 
                                                அரவற்றமது.
                                                     அவ்விடம்.
                                               அரவமாக 
                                               பிணைந்த பின் 




பருகியது-பரவசமான 
பின் வியர்த்தது 


பின் விம்மியது.
தளர்ந்தது 
பின் தயங்கியது.
நடந்தது 
பின் நனைந்தது.


அணைத்தல் 
உரிதல் 
பிணைத்தல் 
- இவை இயங்குதல்.




நனைதல் 
பருகுதல் 
வியர்த்தல் 
- இவை இயக்குதல்.




உருகுதல்-இயக்கம்.
உணர்தல்-இணக்கம்.


இந்த நதி கீழ் மட்டும் அல்ல
 மேல் நோக்கியும் பாய்கிறது.


இதில் மட்டும் தான் 
இயக்கமே இயங்குகிறது.


இயற்கை என்பது காண்பதல்ல 
இயக்குவது.


காமம் 
ஞானத்தின் 
இன்னொரு சொல்.


                                     அலங்கரித்த பின் 
அபிஷேகம் புரிவது 
இந்த பூஜையில் மட்டும் தான்.  


                                                         சிவன் பூஜை  
                                                    சிந்தனைவசமானது
                                                        இவன் பூஜை 
                                                       முந்தானை வசம்.


வெளிச்சம் கடந்து,
ஓசை ஒழிந்தது
வாசனை நுகர்ந்து
நீர் வழிந்தது 
நிலம் குளிர்ந்தது.
















                                                     முன்னம் மேடாயும் 
                                                      பின்னம் சமனாயும் 
                                                                நல் 
                                                      ஏற்பாடுகள்தான் 
                                                             போல...
                                                          பெண்ணுக்கும் 
                                                          பெண்மைக்கும்.


பால் 
பேதமற்றது காமம்.
காமம் அற்ற 
மற்றவை 
உயிர் அற்றது. 




                             காமம் ஜீவனுக்கு சான்று. 


காமம் 
உருகுவதும் 
உருவாவதும்  


                                                 இயங்கி 
                                                இயக்கும் 
                                                 இயக்கம் 
                                                    காமம்.


மற்றவை 
அனைத்தும் மனதார ...
காமத்திற்கு மட்டுமே 
இவ்வுடல்.


                                  கண் கொண்டு, 
                                 காது கொண்டு,
                                  நா கொண்டு,
                                 நாசி கொண்டு,
                                      இவை 
                            அனைத்தும் கொண்ட 
                              இந்த பை உட்பட
                        அணைத்துக்கொண்டாடவே.  






இது பால் உணர்வு - 
அருந்தும்  போதே
 உணர்வானதோ. 


                                      குட்டிகளுக்கு-பின் குட்டியிடுவதற்கு  
                                                         என 
                                                        இந்த 
                                                   பாலுணர்வு 
                                             கவர்ச்சி விளம்பரமோ?
                                                    தேகத்திற்கு-
                                             இனப்பெருக்கத்திற்கு-  
for more/
xxtramix@youtube.com/
nmkamalg@youtube.com

  என் காதலிக்கு,
                                                மன்னிக்கவும் 
                                                        நாளை
                                                                நீ 
                                             மனைவியாகவும் 
                                                       ஆகலாம்.
                                              அப்படியானால்? 
                                                      என் பாதி நீ 
                       அன்புள்ள அரசிக்கு !
                                                                                   என் தேகச்சூட்டிற்க்கு 
     நான் பயன்படுத்திய மாட்டில். என் இதய வாசலிலும் கோலமிட்ட காரணத்தால்
                        என் அன்பே... உனக்கொரு சாசனம். 
 
இந்த இனிமையான 
தருணத்தை 
திரும்ப நினைவு கூறாதே - 
மாறாக/
நாளை நீ விரும்பியவுடன் நாளை மறுநாள் 
வேறொரு நன் மகனோடும் 
மற்றொரு நாள் 
இன்னும் நல்ல ஆணோடு 
என காலம் வெல்.
காமம் கொள்(ல்) 
                            அதாவது ரசி.

காமமும் காதலும் அதாவது 
அதனை தொடரும் 
கலவியும் கல்வியும் 
வெவ்வேறல்ல 
சினேகிதியே...
ஆயிரமாயிரம் உணர்ச்சிகள் கேட்டரிந்ததே.
அறிந்த பின் கேள்.
இதுவே நான் மயங்கிய 
இந்த மாலைப்போழுதின்
 சொர்க்கச்சான்றின் சாசனம்
 பெண்ணே 
  இன்னும் கேள்.
  நீ பன்முக திறமை கொண்டவள் 
  நானும் தான் 
 ஆதலால்
 பயிற்சி பெறு. 
காதல் என்பது கற்ப்புச்சார்ந்ததல்ல

முதலில் கற்ப்பென்பது சுதந்திரத்தின் இன்னொரு சொல்.அப்படியானால்,அது அடிமைத்தனத்தின் இன்னொரு முகவரி 
ஆம்
தீமை என்று ஏதுவுமில்லை 
கெடுவதென்பது இதற்குள் இல்லை.
கெட்டுவிட்டதின் பொருள் 
வளர்ச்சி  இல்லா நிலை 
அது 
பட்ட மறக்கிளையானாலும்
 இங்கே 
உயிர் அல்லவா வளர்கிறது?!...? 
பேதம் களைவது  
ஆணாயும் - பெண்ணையும் அல்ல
 ஆணும் பெண்ணும். 
வாசித்தலில் பொருள், வழங்கும் புத்தகமாயிறு
 புத்தம் புதியதாய்
 புத்தகமும் படி 
பொருள் - விலகும் 
பின் விளையும் 
இதுவே 
விசுவாசம்.
 உழுதவருக்கும் தெரியாது களைபிடுங்குவதில் தான் களைப்பு ஏற்பட்டதென்று. வேண்டாமென்றேன ஒதுங்குவது தீண்டத்தகாத செயல்.
பிடித்தவற்றை கிடைக்காதென்ற 
நிலையில்
 விருப்பமும் கடவுளும் 
நண்பன் 
நம் காமத்தை போல ...
ஆக..


காமம் பழகு.  


கருத்தரிக்க
 கருத்தறிந்து
 கலவி கொள்.. 


செய்தலிலே
 புகுதல் - என்ற புலனறியா - 
தத்துவ -விளக்கம் 
இது 
தவக்கூடம் 
                                                                              


ஆம் 
நம் மேனி என்பது மெய்யென்று - மேன்மை கொள்வாய்
                                                                      தேகம் காமத்திற்காக..
                                                                                                    யாகத்திற்காக..
                                                                                                      யோகத்திற்காக..
                                                தீராத அமிர்தத்தை 
                        தீர்ந்துவிடுமென்று திரும்பி விடாதே... 
வற்றுவது - வளத்திற்காக.. 
தீர்ந்து போவதும் தேவைகளுக்காக.. 
தேவைகளை விருப்பமாக்கு 
விருப்பத்தை இருப்பாக்கு
இனீப்பாக்கு.. 
அவ்விருப்பத்தில் 
உண்மை உணர் 
உண்மை உண் 
                                                                        காம தவம் போற்று ..
                                                                                   எந்நாளும்  
                                                                                காதலியாய்  
                                                                               எல்லையில்லா 
                                                                                 காதலுமாய்..             


iif u want visual,go 2
newaytha@youtube.com/
reeditremix@youtube.com

Wednesday, 15 February 2012



இங்குள்ள 
எழுத்துக்களை
அதாவது
வார்த்தைக்காக இணைந்துள்ள எழுத்துக்களையும்... 
வாக்கியங்களுக்காக 
இணக்கமற சேர்ந்துள்ள 
வார்த்தைகளையும் 

 உற்று நோக்குவோமாயின் 
          அதாவது 
கூர்ந்து கவனிப்போமாயின்...
விளங்கும் அர்த்தம் வேறு-
விளங்க வேண்டிய அர்த்தம் வேறு 
என 
பொருள் பட புரியும்..

ஏதுமற்ற நிலையில்இருந்து நம்மை உருவாக்கி-உயர்த்தி,உணர்வு தந்து 
அவ்வுர்வுக்கோர் ஓசை தந்து அவ்வோசைக்கு,நல்லதோர் உவமை தந்து எழுத்துக்களாக எழுந்து நிற்கும் 
இவ்வியக்கத்தகும்  ஏற்பாட்டை உணர்ந்து..அதாவது பொறுப்புணர்ந்து... 

எடுத்துக்காட்டாக 
பொறுப்பெண்பது...
நான்-பிறந்தேன்-வளர்ந்தேன் ... வளர்த்துவிடப்பட்டேன்- வளர்த்த கடனுக்காக 

உழைத்தேன்-சம்பாதித்தேன்... 
செல்வமும்-உறவுகளும் 
என நாளும்...

பிறந்தேன்-பின் பெற்றேன்... 
வளர்ந்தேன் பின் வளர்விக்கப்பட்டேன்...
என் ஆணைக்குட்பட்டு நடக்க
சொன்னேன்.

பின் அர்த்தம் கூறி... 
என் ஆசைக்கிணங்கி,
அடங்க சொன்னேன்..
பிரியம் என்றதற்க்கு 
புது விளக்கமும் தந்தேன்...

என்பதல்ல பொறுப்பு        

பொறுப்பு என்ன?,
என்பதை புரிந்து,
பொறுப்பாய் இருப்பது.
அதாவது

குறிப்பாக இன்னொன்று

குணாதிசயம் என்ற இந்த வார்த்தைக்குள் மறைந்துள்ள சத்தியம் அதாவது அர்த்தம்.
குணம்+அதிசயம்.
இந்த அர்த்தம் வேறு.
இதற்குள் 
இருக்கும் தன்மை வேறு,
தன்மை அறிந்து - அர்த்தம் புரிவதே..
பொறுப்பு.
அதாவது,
தன்னை புரிவது...
இப்படி 
ஒவ்வொரு வார்த்தைகளையும்
மேம்போக்காக 
அதன் தன்மை 
புரியாமல்-
வெற்று அர்த்தம் 
புரிந்து..கொள்வதென்பது  
நமக்காக 
நாமே ஒரு அர்த்தம் கற்பித்து..
எழுத்துக்களை 
கலங்க படுத்துவதேயாகும்  
ஆதலால்....
அல்லது 
பொறுமையுடன்...
பொறுப்புணர்ந்து 
மீண்டும் 

ஒரு முறை படிக்கவும்.. 

புது விளக்கம் கிடைத்து 
புது பார்வை கொண்டு 

புதியதோர் உலகம் காணலாம்
இது 
இறை என்ற 
அப்பேரியக்க 
காந்த அலைகளின் மீது ஆணை.

ஈர்ப்புடன்
திரு.NMK.